TREES (மரங்கள்)

TREES (மரங்கள்)
உணவு தரும் மரங்கள்

புதன், 15 பிப்ரவரி, 2023

MY FATHER SHIVABABA ! Omshanti.


               கடவுளின் அறிமுகம் !

கடவுளின் வடிவம்!

கடவுள் அசரீரியான ஜோதி புள்ளி வடிவானவர;. கடவுள் மனிதர;களைப் போன்று தனக்கென பஞ்ச தத்துவங்களால் ஆன பௌதீக சரீரத்தையோ, பௌதீக வடிவத்தையோ அல்லது சூட்சும சரீரத்தையோ கொண்டிராதவர;. மனிதர;களுக்கே அவர;களது ஒவ்வொரு பிறவியிலும் அவர;களின் பெயர;களுக்கேற்ப ஒரு பௌதீக சரீரமும், வடிவமும் உண்டு. அதேபோன்று சூட்சும தேவதைகளுக்கும் அவர;களுக்கென சூட்சும வடிவங்கள் உண்டு. அந்த வடிவங்களையே பக்தர;கள் தமது பக்தியின் பலனாக தெய்வீகக் காட்சிகளில் காண்கின்றனர;. ஆனால் கடவுளுக்கு பௌதீக, சூட்சும சரீரங்களோ, வடிவங்களோ இல்லாததால் கடவுளை எமது சரீரத்தின் கண்களாலோ அல்லது தெய்வீகக் காட்சிகளின் மூலமோ காணமுடியாது. கடவுளை நமது மூன்றாவது கண்ணாகிய தெய்வீகப்புத்தி என்ற ஞானக் கண்ணினால் மட்டுமே காணவோ அல்லது அனுபவம் செய்யவோ முடியும். 

ஒரு மனித ஆத்மா தனது சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருந்த போதும் அந்த ஆத்மாவை பௌதீகக் கண்களால் காண முடிவதில்லை சரீரத்தை மட்டுமே கண்களால் காணமுடிகிறது. ஏனெனில் அசரீரியான ஆத்மாக்கள் அனைவரும் கண்களால் காணமுடியாத பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட சூட்சும சக்திகளே ஆவர;. எனவே ஒரு சரீரத்தில் ஆத்மா இருக்கின்றதா அல்லது நீங்கிச் சென்றுவிட்டதா என்பதை அந்த சரீரத்தின் அசைவுகளினதும், செயற்பாடுகளினதும் அடிப்படையில் மட்டுமே நமது புத்தியின் அறிவாள் தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோன்றுதான் கடவுளும் மனித ஆத்மாக்களைப் போன்று ஒரு சூட்சும சக்தியாகிய ஆத்மாவே ஆவார;. ஆனால் கடவுள் ஒரு தாயின் கருப்பைமூலம் இப் பு+வுலகில் ஒரு மனிதப் பிறவி எடுக்காமல் தனது அசரீரியான ஆத்ம நிலையிலேயே தனது வீடாகிய அசரீரி உலகில் மட்டும் சதா வசிப்பவர;. எனவே சரீரத்தில் வாழும் ஆத்மாக்களையே கண்களால் காண முடியாதபோது சரீரமே இல்லாத கடவுளை எவ்வாறு நமது கண்களால் காண்பதென்பது சாத்தியமாகும்.

கடவுளின் இடம்! 

கடவுளின் வதிவிடம் இச் சூரிய, சந்திர, நட்சத்திரங்களைக் கொண்ட பௌதீகப் பிரபஞ்சத்திற்கும் அப்பாலுள்ள செம்பொன்நிற ஒளியாலான எல்லையற்ற உலகமாகும். அங்கேயே பரமாத்மாவாகிய கடவுள் வசிப்பதால் அது பரந்தாமம் என்று அழைக்கப்படுகிறது. அதுவே மனித ஆத்மாக்களாகி நம் எல்லோரதும் அனாதியான நிலையான வீடாகவும் இருப்பதால் அது ஆத்மலோகம் என்றும், இத்துன்ப உலகிலிருந்து ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் விடுதலை பெற்று மீண்டும் திரும்பிச் செல்லவேண்டிய உலகமாக இருப்பதால் அதுவே முக்திதாமம் என்றும்கூட அழைக்கப்படுகிறது. அது இந்த ஐந்து தத்துவங்களுக்கும் அப்பால் உள்ள ஆறாவது தத்துவமாகும். அங்கு ஆத்மாக்கள் தமது ஆடையாகிய சரீரமின்றியே வசிப்பதால் அதுவே அசரீரி உலகமென்றும், நிர;வாணா என்றும், அது சத்தத்திற்கு அப்பாலுள்ள இனிய அமைதி நிறைந்த உலகமாக இருப்பதால் மௌன உலகம் என்றும், சாந்திதாமம் என்றும்கூட அழைக்கப்படுகிறது.  

கடவுள் சதா அசரீரி ஆத்மாவாக தனது வீடாகிய அசரீரி உலகிலேயே எப்போதும் வசிப்பதால் மனிதர;களால் தமது சரீரத்தின் புலன்கள் மூலமாகவோ அல்லது விஞ்ஞானக் கருவிகளின் உதவியுடனோ கடவுளுடன் ஒரு நேரடித் தொடர;பினை ஏற்படுத்திக்கொள்ள முடியாது. ஆத்மாவின் சூட்சும புலனுறுப்புக்களான மனதினதும், ஞானமுள்ள தூய புத்தியினதும் ஒருமுகப்பட்ட நினைவின் மூலமாகவே கடவுளுடன் தொடர;பினை கொண்டிருக்கும் அனுபவத்தைப் பெறமுடியும். 

சதா இப்பௌதீக உலகிற்கு அப்பால் மேலேயே தனது வீட்டில் வசிக்கும் கடவுளை இப்புவியில் எங்கும் தேடி அலைவதோ அல்லது சகல ஜடப் பொருட்களிலும், ஜீவராசிகளிலும் சர;வவியாபியாக இருக்கிறார; என்று கூறுவதோ அல்லது பக்தர;களின் இதயங்களில் வசிப்பவர; என்று கூறுவதோ அனைத்துமே நம்மை இறைவனிலிருந்து தூர விலகிச்செல்ல வைக்கின்ற தவறான கருத்துக்களே ஆகும். 

கடவுளின் பெயர;!

கடவுளுக்கு உண்மையான பெயர; ஒன்று மட்டுமே உண்டு. சிவன் என்பதே அவரது பெயராகும். கடவுள் ஒருவர; மட்டுமே என்றும் தனது நிலை மாறாமல் உயர;ந்த மேன்மையான ஸ்தியில் ஒரே வடிவத்தில், ஒரே பெயரில், தனது வீட்டிலேயே அதன் அதிபதியாக வசிப்பவர;. ஆகையினாலேயே அவர; சிவலோக நாதன் என்றும், சதாசிவன் என்றும்கூட அழைக்கப்படுகிறார;. சிவன் என்றால் நன்மை செய்பவர; என்பதே அர;த்தமாகும். ஏனெனில் கடவுளாகிய சிவன் ஓருவர; மட்டுமே சுயநலமின்றி எந்தவித பிரதிபலனையும் எதிர;பார;க்காமல் எல்லோருக்கும், எப்பொழுதும் நன்மைகளை மட்டுமே புரிபவர;. அவரே சகலரது தூய ஆசைகளையும் பு+ர;;த்தி செய்பவரும் ஆவார;. 

மனித ஆத்மாக்கள் சரீரமற்று இருக்கும்போது உலகில் எந்தவொரு பாகத்தையும் நடிக்காமல் தமது வீட்டில் ஓய்வுநிலையில் இருப்பதால் அவர;களின் ஆத்மாக்களை எந்தவொரு பெயர;கொண்டும் அழைப்பதில்லை. அவர;கள் சரீரங்களில் வாழும்போது மட்டுமே ஒவ்வொரு பிறவியிலும் அவர;கள் வெவ்வேறு பெயர;களைக் கொண்டுள்ளனர;. ஆனால் பரமாத்வான கடவுள் ஒரே ஒருவராகவும் ஏனைய ஆத்மாக்களுடன் ஒப்பிட முடியாத தனித்துவமானவாhகவும் இருப்பதால் கடவுளின் ஆத்மாவிற்கு மட்டும் ஒரு சிறப்புப் பெயர; உண்டு. 

மனிதர;களையோ, தேவர;களையோ அன்றி கடவுளை மட்டுமே பக்தர;கள் அதிக பெயர;களில் அழைக்கின்றனர;. ஏனெனில் அப்பெயர;கள் யாவும் அவரது நற் குணங்களையும், அவர; ஆற்றிய மேன்மையான பணிகளையும் குறிக்கும் அவரது புகழுக்குரிய பெயர;களே ஆகும். கடவுளைப்பற்றிய உண்மைகளை அறியாததினாலேயே மனிதர;கள் ஒரே கடவுளையே வெவ்வேறு மதங்களிலும், வெவ்வேறு மொழிகளிலும் வெவ்வேறு பெயர;கொண்டு வழிபட்டுவந்தபோதும் ஒருவரோடு ஒருவர; எதிரிகளாகி முரண்பட்டு தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கின்றனர;.

கடவுளின் சக்திகள்!

கடவுளே சர;வசக்திவான். அவர; அனைத்து சக்திகளிலும் கடலாக விளங்குபவர;. ஆகவே கடவுளின் சக்திகளை மனிதர;களால் மட்டுமன்றி தேவர;களாலும்கூட அளவிட முடியாது. கடவுளே பலவீனமான ஆத்மாக்களை தன்னுடனான யோகத்தின்மூலம் தன்னைப்போன்று சக்திசாலிகளாக ஆக்குபவர;. கடவுளுடனான யோகசக்தி மூலமாகவே தூய்மையற்றுப்போன ஆத்மாக்களும், தத்துவங்களும் மீண்டும் தூய்மை ஆகுவதன்மூலம் நிலையான அமைதியும், சந்தோசமும், செல்வச் செழிப்பும் கொண்ட புதிய உலகமாகிய சுவர;க்கம் ஸ்தாபிக்கப்படுகிறது.

கடவுளின் குணங்கள்! 

கடவுள் கடல்போன்று எண்ணற்ற திவ்விய குணங்களை கொண்டிருப்பவர;. கடவுள் அனைத்து திவ்விய குணங்களிலும் கடலாக திகழ்பவர;. ஆகையினாலேயே அவரை அன்புக்கடல், அமைதிக்கடல், சந்தோசக்கடல், தூய்மைக்கடல், ஞானக்கடல், பேரானந்தக்கடல், கருணைக்கடல், பொறுமைக்கடல், என்று அனைத்துக் குணங்களிலும் கடலென அழைக்கப்படுகிறார;.

கடவுளின் புhகழ்!

கடவுள் கடல் போன்ற எல்லையற்ற புகழுக்குரியவர;. அதனாNலுயே காட்டு மரங்கள் அனைத்தையும் எழுதுகோலாகவும், கடல்நீர; அனைத்தையும் மையாகவும், ஆகாயத்தையே தாளாகவும் கொண்டு எழுதினாலும் கடவுளின் புகழ் குறையாது எனக்கூறப்படுகிறது. ஏனெனில்  கடவுளே அனைவரையும் அனைத்துப் புகழுக்கும் தகுதி உடையவர;களாக ஆக்குபவர;. 

எந்தவொரு மனிதர;களினதோ, தேவர;களினதோ புகழும் சதாகாலமும் அவர;களுக்கு சொந்தமானதாக இருப்பதில்லை. அவர;களின் நிலை மாறும்போது அவர;களின் புகழும் மறைந்துவிடுகின்றன. ஆகவே எந்தவொரு மனிதரையோ, தேவரையோ கடவுளுடன் ஒப்பிட்டு புகழுவது தவறாகும். அனைவரிடமுள்ள அனைத்துப் புகழும் கடவுள் அவர;களுக்குக் கொடுத்த சிறு துளி பிரசாதமே ஆகும். ஆகவே எந்தவொரு மனிதரும் தாம் புகழடையும்போது தம்மைப் புகழாமல் தம்மை அவ்வாறு ஆக்கியவரைப் புகழ்வதே சரியாகும். ஆனால் மனிதர;கள் தாம் புகழடையும்போது கடவுளை மறந்து போவதாலும், அகங்காரத்தினாலும் தாமே அப்புகழுக்குரியவர; என்று தற்பெருமை கொள்கின்றனர;. ஆகவே உலகிலுள்ள அனைத்துப் புகழும் கடவுளிற்கு மட்டுமே உரியவை ஆகும்.

கடவுளின் பணி!

அனைவரது துன்பத்தையும் நீக்கி அவர;களுக்கு சந்தோசத்தை அருள்வதே கடவுளின் தொழிலாகும். எனவே கடவுள் எவருக்கும் எத் துன்பத்தையோ, சோதனைகளையோ கொடுப்பதில்லை. மனிதர;கள் தமது அறியாமையின் காரணமாகவே கர;மவிதிப்படி தமது செயல்களின் மூலம் தாமே தமக்கு துன்பத்தை விளைவித்துக் கொள்கின்றனர;. ஆகையால் தனது ஞானத்தின்மூலம் மனிதர;களின் அறியாமையைப் போக்குவதன்மூலமும், கர;மதத்துவத்தைப் புரியவைப்பதன்மூலம் அவர;கள் மேலும் பாவச் செயல்கள் செய்யாமல் அவர;களைத் தடுப்பதுடன், மேன்மையான புண்ணிய செயல்களை எவ்வாறு செய்வதென அவர;களுக்குக் கற்பிக்கின்றார;. 

கடவுள் தனது உண்மையான அறிமுகத்தைக் கொடுத்து தன்னுடன் எவ்வாறு யோகம் செய்வதெனக் கற்பிப்பதன்மூலம் மனிதர;களின் பலபிறவிப் பாவக்கணக்கை எரித்து தூய்மையாக்கி சாதாரண மனிதர;களாக இருந்த அவர;களை நற்பண்புகள் நிறைந்த தேவர;களாக மாற்றுகின்றார;. அத்துடன் தன்னுடனான யோகசக்தியின்மூலம் தூய்மையற்ற பஞ்சதத்துவங்களையும், இயற்கையையும் தூய்மை ஆக்குவதன்மூலம் உலக விநாசத்தைத் தூண்டி துன்பம் நிறைந்த பழைய உலகை அழித்து நிலையான அமைதியும், சந்தோசமும், செல்வச் செழிப்புமிக்க தேவர;கள் வாழத்தகுதியான புதிய உலகமான சுவர;க்கமாக மாற்றுகின்றார;. புதிய உலகமாற்றம் என்ற தனது பணி முடிந்ததும் மீண்டும் தனது வீட்டிற்கு ஓய்வெடுக்க சென்றுவிடுகின்றார;. கடவுளே அனைவருக்கும் நன்மைபயக்கின்ற அனைத்து நற் செயல்களையும் செய்பவரும், செய்விப்பவருமார;. கடவுள் தனக்கென சரீரம் இல்லாததினால் ஏனையோரை அச் செயல்களைச் செய்யத் தூண்டுவதன்மூலம் தனது அனைத்துப் பணிகளையும் இனிதே நிறைவேற்றுகின்றார;. கடவுளாகிய சிவனே பிரம்மாவின்மூலம், புதிய மனித உலகமாகிய சுவர;க்கத்தைப் படைத்து, சங்கரர;மூலம் அசுர குணம்கொண்ட மனிதர;களின் பழைய உலகை அழித்து, வி‘;ணுவின்மூலம் தனது படைப்பாகிய புதிய உலகை பராமரித்துக் காக்கின்றார;. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் அவரே மும்மூத்;திகளின்மூலம் செய்வதனால் அவர; ஆங்கிலத்தில் புழுனு - ( புநநெசயவநசஇ ழுpநசயவநசஇ னுநளவசழலநச )  என்று அழைக்கப்படுகிறார;.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக