TREES (மரங்கள்)

TREES (மரங்கள்)
உணவு தரும் மரங்கள்

செவ்வாய், 1 அக்டோபர், 2019

MATESHWARI JAGDAMBA SARASWATI மம்மா


மம்மா
நாம், மம்மாவை மிக அன்புடன் நினைவு செய்கிறோம்.
மம்மா, துாய்மையின் திரு உருவம், விவேகம் மற்றும் அன்பின் திருஉருவம் என புரிந்து நினைவு செய்கிறோம்.
அவரின் சக்தியை, அவரின் அறிவுரையை அவர் அறிவுத்திறனின் பரிபூரணத்தை அவரின் இனிய பண்பை, சீரிய ஒழுக்கத்தை எல்லாவற்றிற்கும் மேலாக, நினைவு செய்வது அவர் காட்டும் அன்பைத்தான்.

மம்மாவின் நினைவு நாளன்று அவரை விசேஷ அன்புடன் நினைவு செய்கின்றோம்.

அவரின் கம்பீர திரு உருவம், நமக்கு ஊக்கமளிக்கிறது. அவர் இதோ! இருக்கின்றார். ஆம், இன்று மட்டுமே நினைவு செய்வதில்லை, ஒவ்வொரு நாளும், நம் எண்ணத்திலும், இதயத்திலும், செயலிலும் இருக்கின்றார்.

எப்படி இல்லாதிருக்க முடியும்?

இருப்பதெல்லாம், ஒரே ஒரு மம்மா தானே!


மம்மாவும் மற்ற தேவிகளும்

எல்லா தேவிகளின் மகிமைக்குக் காரணம், அவர்களிடமுள்ள தெய்வீக குணங்கள் மற்றும் தெய்வீக சக்திகளை, எல்லாம் வல்ல சர்வ சக்திவான் ஒருவரிடமிருந்து பெற்றவர்கள் என்பதால் தான்.

இந்த சிறு புத்தகத்தைப் படிக்கும் போது, தேவிகளிடமுள்ள தெய்வீகத் தன்மைகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, முக்கியமானது சர்வ சக்திவானாக விளங்கும் ஒருவரிடம் நாம் எல்லோருமே அன்பு கொண்டிருக்கிறோம் என்பதாகும்.



அம்பா தேவி
சம்பூரணத்தின் திரு உருவம்

அமைதி இழந்து, மகிழ்ச்சியின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மனித இனம், அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அம்பா தேவி அருள்பாலிக்கின்றார்.

அனைவர் உள்ளத்தின் ஆசைகளையும் நிறைவேற்றுகின்றார்.




ஸ்ரீதுர்கா தேவி
சக்தியின் திரு உருவம்
துர்கா தேவி, அசரீரியாக விளங்கும் சிவபரமாத்மாவிடமிருந்து சக்திகளை வரமாகப் பெற்றவர்.
இந்த தெய்வீக சக்திகள் மூலமாக எல்லா பலவீனங்களையும் நீக்குபவர்.

ஸ்ரீ லக்ஷிமி தேவி
செல்வத்தின் திரு உருவம்
ஸ்ரீலக்ஷிமி ஞான முத்துக்களின் திரு உருவாக விளங்கும் தன தேவி, எல்லா ஆன்மாக்களுக்கும் அளவற்ற ஞான தனத்தை அருள்பவர், குணங்களால் அலங்கரிப்பவர்.

ஸ்ரீ சரஸ்வதி தேவி
ஞானத்தின் திரு உருவம்
கலைவாணியாகிய சரஸ்வதி தேவி ஞான வீணை மீட்டி, எல்லா ஆன்மாக்களையும் அறியாமை இருளிலிருந்து விழிப்புணர்வு பெற வைக்கும் ஞான ஒளி தேவி.

ஸ்ரீ காளிகாம்பாள்
வீரத்தின் திரு உருவம்
வீரம் மற்றும் தைரியத்தின் திருஉருவமாகக் காட்சியளிப்பவர் காளிதேவி.
ஒவ்வொரு ஆன்மாவிலும் உறைந்திருக்கும் தீய எண்ணங்களையும், தீய விகாரங்களையும் அழிப்பவர்.

ஸ்ரீ வைஷ்ணவி தேவி
துாய்மையின் திரு உருவம்
ஸ்ரீ வைஷ்ணவி தேவி துாய்மையின் ஒளிக்கதிர்களை ஒவ்வொருவருக்கும் பரவச் செய்பவர்.
இச்சக்தியானது சாதாரண மனிதர்களாக ஆகிவிட்ட அனைவரையும் குணவான்களாகவும், விகாரமற்றவர்களாகவும், தெய்வீகத் தன்மையுடையவர்களாகவும் ஆவதற்கு அதிகாரமளிக்கிறது.

ஸ்ரீ உமாதேவி
ஊக்கம், உற்சாகத்தின் திரு உருவம்
எல்லோருடைய மனதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற மனக்கவலைகளையும், அவநம்பிக்கையையும் நீக்கி, மனதிலும், இதயத்திலும் நம்பிக்கை, ஆா்வம், ஊக்கம் மற்றும் உற்சாகத்தை நிரப்புபவள் உமா தேவி.

ஸ்ரீ காயத்ரிதேவி   
சுப மங்கள சகுனத்தின் திருஉருவம்
கவலைகள் மற்றும் பயம் ஆகிய கெட்ட சகுனம் விலக காயத்ரி தேவிக்கு விசேஷ வழிபாடுகள் செய்கின்றனர்.
இதன் மூலம் தேவியின் அருளையும், சக்தியையும் பெற்று எல்லா ஜீவாத்மாக்களும் உண்மையான ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் அடைகின்றார்கள்.
சந்தோஷி மாதா
பூரண மன நிறைவின் திரு உருவம்

பூரண மன நிறைவின் உருவாக விளங்குபவர் தேவி சந்தோஷி மாதா.

இந்த விசேஷ குண மகிமையின் மூலமாக எல்லோருக்கும் எல்லா நன்மைகளையும், மன நிறைவையும் அளிப்பவர்.

பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான நிலையம்.

ஓம் சாந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக